Sunday 22 February 2015

நந்தவனபூக்கள்.




நந்தவனபூக்கள்.


பூக்கள்
புன்னகையை அள்ளிகொட்டும்
புதுகவிதைகள்,
அன்புக்கு தூது போகும் வாய் பேசா
ஊமைகள்,
கவிஞரின் கற்பனைக்
காவியங்கள்,
கார்மேகம் எனும் கூந்தலை
மோகத்துடன் அணைத்துக்கொள்ளும்
மல்லிகை மொட்டுகள்,
சுந்தர சுமங்கலியின்
அந்தரங்க பூஜைகளை
அரங்கேற்றும் நறுமலர்கள்,
காலம் எனும் தோட்டத்தில்
அன்றன்றே பிறந்து
அன்றன்றே மரனத்தை தழுவும்
உரு இழந்த
உயர் ஓவியங்கள்
நந்தவனபூக்கள்.

26 comments:

  1. //பூக்கள்
    புன்னகையை அள்ளிக் கொட்டும்
    புதுக் கவிதைகள்..//

    பூக்களைப் போலவே - கவிதையும் அழகு!..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. நந்தவனம் மலர்ந்து மனம் வீசுகிறது
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோ,

      வலைதளத்தில் நந்தவனம் மலர்ந்து மனம் வீச இந்த விதையை ஊன்றியது தாங்கள் தானே சகோ.வணக்கத்துடன் என் நன்றிகள்,,,,,,,

      Delete
  4. தங்களின் வாழ்த்துகள் தொடரட்டும், நானும் தொடர்கிறேன், நன்றிகள்,,,,,,,,,,

    ReplyDelete
  5. புன்னகை, அன்பு, மோகம், அந்தரங்கம், பூஜை... (உயிர் ? உயர் ஓவியம்).
    சிறப்பு மிகு முயற்சியான கவிதை, பாராட்டுக்கள். அருமை சகோதரியே.

    sattia vingadassamy

    ReplyDelete
  6. பூக்களைப்பறிக்க கோடரியோடு வந்தேன் பூக்களின் அழகு கண்டு மயங்கி நின்றேன்
    இணைத்துக்கொண்டேன் பதிவை நன்று.

    ReplyDelete
    Replies
    1. பூக்களைப்பறிக்க கோடரியா? தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.தாங்கள் தானே

      Delete
  7. பூக்களின் கவிதை தொகுப்பு மிக அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  8. நந்தவனபூக்கள் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  9. நறுமணம் வீசுது
    அருந்தமிழ் பேசுது
    பருகிட பெருகுது
    பொங்குதமிழ் பொங்குது
    சகோதரி மகேஸ்வரி பாலாவின்
    நந்தவன பூக்கள் சொறியும்
    தேன் சுவை கவி சுவைத்தே!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  10. அன்றன்றே பிறந்து
    அன்றன்றே மரனத்தை தழுவும்
    உரு இழந்த
    உயர் ஓவியங்கள்---- இந்த வரிகளை படித்தபோது வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  11. நந்தவனப் பூக்கள்
    நறுமணம் வீசி
    நறுமுகை காட்டி
    நல்வரவு செப்புகிறதே....

    இனிமை சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கவி வாழ்த்துக்கு நன்றிகள் பல.

      Delete
  12. நல்ல வரிகள் ரசித்தோம் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  13. அன்றன்றே பிறந்து
    அன்றன்றே மரனத்தை தழுவும்
    உரு இழந்த
    உயர் ஓவியங்கள்
    நந்தவனபூக்கள்.

    ReplyDelete
  14. அருமை அருமை கவிஞரே...............

    உங்கள் நந்தவனப்பூக்களின் முன் நான் செய்வது வெறும் காகிதப்பூக்கள்தான். தொடருங்கள்.

    நன்றி.

    ReplyDelete