மாவீரன்
விசுவநாததாஸ் 3
1940 ஆம் ஆண்டு திரும்பவும் நாடகங்களை நடத்தத்
திட்டமிட்டார். இந்த நாடகங்களினால் வரும் வருமானத்தை வைத்து ஏலத்திற்கு வரும் வீட்டை
மீட்டு விடலாம் என எண்ணினார். உடல்
நலம் குன்றியதோடு ஊரிலிருந்து வந்து சென்னையில் பழைய வண்ணாரப் பேட்டையில் சாக்கு
வியாபாரியான தாமஸ் வீட்டில் தங்கினார்.
தாஸை வைத்து நாடகம் நடத்தும்
நாடக கான்ட்ராக்ட்காரர்களை போலீஸ் மிரட்டியதன் காரணமாக, அவருக்கு நாடகங்கள் குறைந்தன. அதோடு ‘நாவிதர்’ சமுதாயத்தைச் சேர்ந்த தாஸோடு நடிக்க மாட்டோம் என்று
நடிகைகள் பின்வாங்கினார்கள்.
இது தாஸை வெகுவாகப் பாதித்தது. மனதளவில் நொந்துபோனார். ஒவ்வொரு நாடகத்திலும்,
மறக்காமல்,
“தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவோர் உண்டோ,
மண்ணில் ஏங்குவோர் உண்டோ”
என்ற பாடலைப் பாடிக் கொண்டுதான் இருந்தார்.
நடிகைகளில், கே.பி.ஜானகி அத்தடையை
மீறி அவருடன் நடிக்க
முன்வந்தார். பிறகு முத்துலட்சுமி என்ற பிராமண நடிகை. பிறகு மற்றவர்களும் முன் வந்தார்கள்.
பல்வேறு துன்பங்களைத் தாங்கினார்,
தன் நாடகத்தின் முலம் தன் வீட்டை மீட்க
எண்ணி, 1940 டிசம்பர் 31-ம் நாள் இரவு, ‘வள்ளித் திருமணம்’ நாடகம், சாலக் கொட்டகை எனப்பட்ட ராயல் தியேட்டரில் நிகழ இருந்தது. ஒரு வார நாடக வருவாயில் கடனை ஓரளவு
அடைத்து விடலாம் என்று நினைத்திருந்தார் தாஸ். முதல் மூன்று நாட்கள் மேடை
ஏறும் உடல் நிலையில் அவர் இல்லை. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வள்ளித் திருமண நாடகத்தில் முருகன் வேடத்தில்
நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. ராயல் தியேட்டரே நிரம்பி வழிந்தது.
போலீஸாரும் வந்திருந்தனர்.
அன்று இரவு மேடைக்கு முருகன்
வேஷத்தில் வந்தார். முதல் காட்சி. முருகன், மயிலாசனத்தில் அமர்ந்து பாடத் தொடங்கினார்.
‘மாயா உலகம்-இம்
மண் மீதே’ என்ற பல்லவி.
தொடர்ந்து பாட முடியாமல் அவர் தலை சாய்ந்தது.
விசுவநாததாஸ் முருகன்
வேஷத்தைக் கலைக்காமலேயே இறந்துபோனார். என்னைப் பற்றி தவறான தகவல் வந்தால் நம்ப வேண்டாம் என்று தாஸ்
சொல்லி இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள வரவில்லை. 1941
ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மயில்மீது அமர்ந்த முருகன் வேடத்தில் இறுதியாத்திரை
நடந்தது.
யானைக்கவுனி, சைனா பஜார், செளகார்பேட்டை, தங்கசாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. இரவு 7 மணி அளவில் மூலக்கொத்தலம் மைதானத்தில் தாஸின் மகன் சுப்பிமணியம் சிதைக்கு தீ மூட்டினார். அவரை எரித்தது சாதித் தீ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
யானைக்கவுனி, சைனா பஜார், செளகார்பேட்டை, தங்கசாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. இரவு 7 மணி அளவில் மூலக்கொத்தலம் மைதானத்தில் தாஸின் மகன் சுப்பிமணியம் சிதைக்கு தீ மூட்டினார். அவரை எரித்தது சாதித் தீ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நாடகம் முடிந்தவுடன் அரங்கை
பிரித்துவிட வேண்டும் என சென்னை மாநகராட்சி நாடகத்திற்கு அனுமதி வழங்கும்போதே
உத்தரவிட்டிருந்தது. நீதிக்கட்சி மேயரான வாசுதேவ் ஈமச் சடங்குகள் முடியும் வரை அரங்கை
பிரிக்க வேண்டாம் என்று மறு உத்தரவு இட்டார். அரங்கின் உரிமையாளர் கண்ணையா உடையார்
இனிமேல் இந்த அரங்கில்
எந்தக் கலை நிகழ்ச்சியும் நடக்காது. தாஸின் நிகழ்ச்சியே கடைசியாக இருக்கட்டும் என்றார்.
முன்டி அடித்து ஓடிப்போய் நாற்காலியில் அமர்ந்து
கொண்டவர்களுக்கு வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. தியாகிகள், தாழ்த்தப்பட்ட சாதியாகவோ, விலக்கப்பட்ட சாதியாகவோ, விளிம்பு நிலைச் சாதியாகவோ இருந்துவிட்டால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்தியச் சுதந்திரப்
போருக்குத் தலைவர்கள் செய்த பங்களிப்புக்குப் பெரும்பாலும் சுவடுகள் இல்லை. விடுதலை பெற்ற
தேசத்தைக் காணத் தன் நடிப்பாலும் பாட்டாலும் மகத்தான தன் போர்க்குணத்-தாலும் தொண்டு செய்த மாபெரும் கலைஞர்
விசுவநாததாஸ், மறக்கப்பட்ட பெரும்
ஆளுமைகளில் ஒருவர். அவர் காலத்தில் அவருக்கு இணை சொல்லத்தக்க நாடகக் கலைஞர்
இந்திய அளவிலே மிகச் சிலரே இருந்தார்கள்.
தாஸ் வாழ்ந்தது 54 ஆண்டுகள் மட்டுமே. இதில் 29 முறை சிறைக்குச் சென்றார் அந்த வீரத் தியாகி.
தேசத்தைத் தவிர, விடுதலையைத் தவிர வேறு எதையும்
நினைக்காத அந்தக் கலைஞனை, பின்னால்
சுதந்திர இந்தியப் பதவிக்கு வந்தவர்கள் மறந்தே போனார்கள்.
தன் நாடகமொன்றில் முருகன்
வேடமிட்டு மயில்
மீது அமர்ந்தபடி அமரரான அந்த தேச விடுதலைப் போராட்ட வீரர், அந்த தியாக புருஷனுக்கு
அஞ்சலி செலுத்துவோம்.
மாவீரன் விசுவநாததாஸ் அவர்களின் வீரவரலாறு போற்றப்பட வேண்டியது இன்றைய திரையுலகம் இவரை மறந்தது எப்படி நன்றி மறந்த உலகம்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஎழுத்தின் பின்புறம் சிவப்பு இல்லாமல் வேறு லைட் பச்சை கலர் கொடுக்கலாம் படிப்பவரின் கண்களுக்கு பாதிப்பு வரும் எனக்கே இரண்டு கண்தான் இருக்கு.
ReplyDeleteஎல்லாம் கண் பட்டுவிடும் என்று தான் ஜி, அப்புறம் எமக்கு 3 கண். நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteநினைவு கூறி பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி... நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி
நம்ம பக்கம் வாருங்கள்... ஒரு தடவை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,தங்கள் கவிதைகள் அனைத்தும் படித்துள்ளேன். இதோ வருகிறேன்.
Deleteஅருமையான பதிவு. எனது பக்கத்துக்கும் வாருங்கள்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteபகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteநல்லவர்களை
ReplyDeleteநினைக்கவும் போற்றவும்தான்
நமக்கு நேரமேயில்லையே
என்ன செய்வது காலத்தின் கொடுமை சகோதரியாரே
முருகன் வேடமிட்டு மயில் மீது அமர்ந்தபடி அமரரான அந்த தேச விடுதலைப் போராட்ட வீரர், அந்த தியாக புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteவிஸ்வநாத தாஸ் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி அவர் போன்றோருக்கு நிச்சயம் நாம் அஞ்சலி செலுத்தவே வேண்டும் தக்க தருணத்தில் எடுத்து வந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஅந்த வீரத் தியாகி பற்றி அறிய வைத்தமைக்கு நன்றிகள் பல...
ReplyDeleteதியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் - கடைசி நிமிடங்களைப் படித்ததும் மனம் கலங்கி விட்டது..
ReplyDeleteநல்லோர் மனங்களில் அவர் என்றென்றும் வாழ்ந்திருப்பார்!..
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteதியாகி விஸ்வ நாத தாஸ் பற்றி கேள்வ்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் விரிவாக அறிந்தேன்.நன்றி
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteதியாகி விஸ்வநாத தாஸ் பற்றிய தகவல்கள் அருமை! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஇதைத்தான் நல்ல சாவு என்பார்கள்..எந்தவித நோய்நொடி இல்லாமல் சித்தரவதை இல்லாமல் இறந்தது.
ReplyDeleteஅவர் மனம் எத்துனை முறை செத்ததோ,,,,,,,,,,,,,,, தங்கள் மீள் வருகைக்கு நன்றிகள் பல,
ReplyDelete